1 லட்சம் பரிசு வென்ற வீரர் மருத்துவமனையில் அனுமதி
இன்று (ஜன. 14) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது. குறித்த காளையை பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு, களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த நிலையில் பரிசு பெற்ற ரஞ்சித் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags : 1 லட்சம் பரிசு வென்ற வீரர் மருத்துவமனையில் அனுமதி