"ஆருயிர் அண்ணன் மு.க. முத்துவை இழந்தேன்" - முதலமைச்சர் பதிவு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவரது மறைவு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க. முத்து இறப்பு செய்தி இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :