போதகரின் மகள் விபத்தில் பலி

கன்னியாகுமரி: திங்கள் நகரை அடுத்த பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்த ஜாண் சுஜன் லால்( 49) விவசாயம் செய்து வருகிறார் இவரது மனைவி பிரபா செலின்( 42 )இவர் பைக்கில் மார்த்தாண்டம் வந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு சென்று கொண்டிருந்தார். பயணம் சிஎஸ்ஐ சர்ச் முன் பகுதியில் செல்லும் போது ஒரு நாய் குறுக்கே வந்தது இதில் இவர் நிலை தடுமாறி விழுந்தார். பலத்த காயம் ஏற்பட்ட இவரை மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இவரது தந்தை ஈசாக், பேச்சிபாறை சபை போதகராக உள்ளார் .இவரது மரணம் பத்தேல்புரம் மட்டும் பேச்சுப் பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :