தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கிய கோரிக்கைகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் முதலமைச்சர் கடிதம்
தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள பத்து முக்கிய கோரிக்கைகளை அனுப்ப வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில் 10 முக்கிய திட்டங்கள் குறித்து பட்டியலை 15 நாட்களுக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இடம் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனியாக கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :