தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் மூன்றாவது இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது-முதல்வர்

by Editor / 23-08-2022 04:02:28pm
தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் மூன்றாவது இடத்தில் தமிழகம்  முன்னேறியுள்ளது-முதல்வர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டு  பேசியதாவது:- தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தப்படக்கூடிய ஏழாவது முதலீட்டாளர் மாநாடு இது.ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும்-புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும்-தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது என்றார்.

 

Tags :

Share via