கொலை வெறி தாக்குதல் - பாஜக மாவட்ட தலைவர் கைது

by Staff / 11-05-2024 11:52:46am
கொலை வெறி தாக்குதல் - பாஜக மாவட்ட தலைவர் கைது

திருவாரூரில் தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே ஏற்பட்ட தகராறில், கடந்த 8ஆம் தேதி மாவட்ட செயலாளர் மதுசூதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த விவகாரத்தில், திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மதுசூதனனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒன்பது பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories