உங்க ஆதார் கார்டில் எத்தனை போன் நம்பர் இருக்கு?
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் கார்டு வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு முக்கியமாக உள்ளது.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் அவசியம். அதை வைத்துத்தான் ஆதார் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்ய முடியும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபியைப் பதிவிட்டால்தான் ஆதாரில் திருத்தங்கள் செய்ய முடியும். எனவே மொபைல் நம்பர் என்பது மிக முக்கியம்.
ஆதார் கார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவருடைய ஆதார் கார்டை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆதார் கார்டை வைத்து கடன் கூட வாங்கலாம். எனவே ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் உங்களிடம் இருப்பது அவசியம்.
ஆதார் கார்டில் என்னென்ன மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வதற்கு முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.அடுத்து உங்களுடைய 10 இலக்க மொபைல் நம்பரைப் பதிவிட வேண்டும். ஓடிபி நம்பர் அனுப்பப்படும்.அதைப் பதிவிட்டு சைன் இன் செய்ய வேண்டும். உள்ளே சென்றதும் உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை நீங்கள் அங்கே பார்க்கலாம்.
ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத மொபைல் நம்பரோ அல்லது உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரோ அங்கே இருந்தால் அதை நீங்கள் டெலீட் செய்துவிடலாம்.
Tags :