புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் ......இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர்ஷேக்   ஹசீனாவை உடனடியாக நாடு கடத்த வேண்டும் .

by Admin / 14-02-2026 07:59:28am
புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் ......இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர்ஷேக்   ஹசீனாவை உடனடியாக நாடு கடத்த வேண்டும் .

வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசிய கட்சி மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர்ஷேக்   ஹசீனாவை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தீவிர்படுத்தி உள்ளது. சமீபத்திய தேர்தலில் வங்காளதேச தேசிய கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் அலாவுதீன் அகமது ஜேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு கொண்டு வந்து விசாரணைக்கு உட்படுத்த இந்தியா வை முறையாக வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் வங்கதேச சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 2025 நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது. ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் முதல் டெல்லியில் தங்கி உள்ளார் வங்கதேசத்தின் நாடு கடத்தும் கோரிக்கையை இந்திய வெளிவரவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ள போதிலும் அவர் தற்பொழுது வரை இந்தியாவில் பாதுகாப்பான நிலையில் உள்ளார் .இந்த விவகாரத்தில் இந்தியா வங்கதேசம் இடையிலான தூதரக உறவுகளில் பெரும் சவாலாக ஒரு எழுத்து உள்ள நிலையில் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் நட்பு பாராட்ட விரும்புவதாகும். ஆனால், சட்டரீதியாக ஹசீனா ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வங்கதேச தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. தற்போது வங்க தேசத்தில் தாரிக் ரகுமான் தலைவரான புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் ......இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர்ஷேக்   ஹசீனாவை உடனடியாக நாடு கடத்த வேண்டும் .
 

Tags :

Share via

More stories

Logo