ரயில் தண்டவாளத்தில்ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள்.

by Editor / 28-02-2025 10:02:57am
ரயில் தண்டவாளத்தில்ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள்.

கேரளா: கோட்டயம் ஏற்றுமனூர் அருகே ரயில் தண்டவாளத்தில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. காரித்தாஸ் மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று அதிகாலை ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் கோட்டயம்-நீலம்பூர் விரைவு ரயிலில் மோதி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் ஏறி இறங்கியதால் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags : ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள்

Share via