வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்வருகை குறைந்ததற்கு இட்லி சாம்பார் ஒருகாரணமாம்-அமைச்சர். 

by Editor / 28-02-2025 10:20:27am
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்வருகை குறைந்ததற்கு இட்லி சாம்பார் ஒருகாரணமாம்-அமைச்சர். 

கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு வினோத காரணத்தை பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.மக்களின் கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற கோவாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு இட்லி, சாம்பாரும் ஒரு காரணம் என்று பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு அரசை மட்டும் குறை சொல்ல முடியாது என்று கூறிய அவர், புதிய காரணிகளையும் அடுக்கியுள்ளார்.

அதன்படி, ரஷ்யா-உக்ரைன் போராலும், கடற்கரை ரிசார்ட்களில் இட்லி, சாம்பார், வடபாவ் போன்ற உணவுகளாலும் கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார். கடற்கரை ரிசார்ட்களில் உள்ள குடில்களை வணிகர்கள் வாடகைக்கு விடும் நிலையில், அங்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பலர் இட்லி சாம்பார் விற்பதாகவும் அவர் சாடினார்.
 

 

Tags : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்வருகை குறைந்ததற்கு இட்லி சாம்பார் ஒருகாரணமாம்-அமைச்சர் 

Share via