ஐரோப்பாவில் காட்டுத்தீ.. பற்றி எரியும் வனங்கள்
ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நகரங்கள், வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இத்தாலி, குரேஷியாவின் ஒருசில பகுதிகளில் காட்டுத்தீ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பாவில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக ரோம், மிலன் உட்பட 21 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று லண்டனில் 35 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags :



















