மழைவெள்ளத்தால் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க பிரேமலதா வேண்டுகோள்.

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் விமான நிலையாயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மிக மிக அந்த காலத்தில் ரசிகர் மன்ற காலத்துல இருந்து இன்றைக்கு வரைக்கும் இருக்கின்ற ஒரு கிளைச் செயலாளர் உடைய மகனுடைய திருமணத்திற்காக நான் தென்காசி மாவட்டத்திற்கு வந்திருக்கேன், அது மட்டும் கிடையாது இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னைக்கு நைட்டு வந்து சென்னை புறப்படுகிறேன்.அதனால் கட்சியினுடைய பங்ஷன்ல கலந்து கொள்வதற்காக நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீங்க நான் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடியாக கள ஆய்வுக்குச் சென்று அத்தனை இடங்களிலும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட எல்லா இடத்தையும் பார்வையிட்டேன்,மிகப்பெரிய பாதிப்பு சாதாரண பாதிப்பு இல்லைங்க.. மக்களை பெரிய பெரிய ஆல்மோஸ்ட் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க மக்கள் பாதிக்கப்பட்டுருக்காங்க எல்லா இடங்களிலுமே மழை வெள்ளம் வந்து புகுந்து எல்லா வீடுகளும் சேரும் சகதியமாக இருக்கின்ற ஒரு நிலைமை விழுப்புரம் ,கடலூர் ,கள்ளக்குறிச்சி, தர்மபுரி ,கிருஷ்ணகிரி, அதே மாதிரி பார்த்தோம்னா வேலூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,எல்லா இடமுமே மிகப்பெரிய பாதிப்பு முதல்வர் வந்து எதிர்க்கட்சிகள் வந்து வாய்க்கு வந்ததை பேசுறாங்க அப்படின்னு அவரு சொல்றாரு வீண் விளம்பரம் தேடுறாங்க அப்படின்னு அவர் சொல்றது ரொம்ப தவறான ஒரு விஷயம்.இதில் வீண் விளம்பரம் தேட வேண்டியது ஒன்றுமே கிடையாது. இன்னைக்கு அமைச்சர் பொன்முடி அவர்கள் போறாரு மக்கள் வந்து சேர வாறி அவர் மேல வீசுறாங்கன்னா அது மட்டும் கிடையாது இந்த அளவுல தான் இந்த ஆட்சி.நல்லது நடந்தது ன்னா முதல்வருக்கு நன்றி சொல்லுவாங்க அதை எப்படி உடனடியாக சரி செய்யணும்னு நினைச்சு அதை செய்தார் என்றால் உண்மையிலேயே இந்த ஆட்சியும் முதல்வரை வரவேற்கும் அதை விட்டுட்டு இந்த தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓட வில்லை என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அதற்கு உதாரணம் விழுப்புரம் மாவட்டம் இந்த ஆட்சி உண்மையிலேயே நல்ல ஆட்சி நடக்குதா இல்லையா அப்படின்றது மக்கள் சொல்லணும். அதனால் இதெல்லாம் ஒரு தவறான ஒரு முன்னுதாரணம் இதெல்லாம் வந்து எதிர்க்கட்சிகளை வந்து குறை சொல்றதை விட்டுட்டு உடனடியாக நிவாரண நிதி அத்தனை மக்களுக்கும் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் உடனடி நிவாரண நிதி வழங்கணும். அதே மாதிரி விவசாய பெருமக்களுக்கும் உடனடியாக நிவாரணம் கொடுக்கணும்,நாங்க நிவாரணம் கொடுக்க சென்றபோது அவர்களின் வேதனை நிலையை நிலைமையை நான் பார்த்தேன்,சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் சூழல் அவர்கள் உள்ளனர். மறுபடியும் இன்னொரு வாட்டி நாங்ககெல்லாம் பாதிக்கப்பட்டிருக்க அந்த இடங்களுக்கு செல்ல இருக்கிறோம்,. எல்லாரும் அனைத்து கட்சி, சமூக ஆர்வலர்கள் முடிந்த உதவியை அந்த மக்களுக்கு செய்யுங்கள்,இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது, இது வந்து இவங்க அரசு முன்கூட்டியே அதை வந்து சரியாக பிளான் பண்ணி செயல்பட்டிருந்த நல்ல தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை தீட்டி இருந்தால் இந்த மாதிரி எல்லாம் வந்திருக்காது எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டாங்க. இன்னைக்கு மக்கள் பெர்ம் வேதனையில் பொருட்களையெல்லாம் இழந்து ஒண்ணுமில்லாமல் இல்லாமல் இருக்காங்க இதுல இருந்து அவங்க சீக்கிரம் மீண்டு வரணும், சேமித்த அத்தனை பொருட்களையும் இழந்து உயிரைத்தவிர வேறுஎதுவுமில்லாமல் நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு தவிர மீதி அத்தனை இழந்து நிற்கதியை நிற்கிறார்கள் அதனால் இன்னைக்கு நம்ம பக்கத்து ஸ்டேட் பாண்டிச்சேரி அவங்களே ஒரு ரேஷன் கார்டுக்கு அஞ்சாயிரம் ரூபாய் அறிவித்தார் அந்த முதலமைச்சர், இவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரணும் அதேபோல விளைநிலங்களில் அத்தனை விவசாயிகள் பாதித்த அவங்க அத்தனை பேருக்குமே குறைந்தபட்ச ரூ.50,000 அதுக்கு மேல நிறைய பாதிப்பு இருப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இந்த அரசு கொடுத்தால் தான் அவங்க வாழ்க்கையில மீண்டு வர முடியும், அதனால இது வந்து நாங்க எல்லாம் போய் சாப்பாடு கொடுக்கிறோம் துணிமணி கொடுக்கறோம் அப்படின்னு சொல்வதை யார்வேண்டுமானாலும் செய்யலாம் , இந்த இழப்பிலிருந்து அந்தமக்கள் அவர்களை வாழ்க்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் அதற்க்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Tags : மழைவெள்ளத்தால் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க பிரேமலதா வேண்டுகோள்.