திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவு.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. திருவாரூர் புதிய ரயில் நிலையத்தை முழுவதுமாக பனிப்பொழிவு முடி மறைத்துள்ளது. இதேபோன்று நெல் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் பனிப்பொழிவு படர்ந்துள்ள காட்சி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக திருவாரூர் சேந்தமங்கலம் கமலாபுரம் கூத்தாநல்லூர் கோட்டூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது வரை கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
Tags : திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவு