பயங்கரவாதம் பொது எதிரி: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

by Staff / 24-10-2023 04:43:10pm
பயங்கரவாதம் பொது எதிரி: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 16-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இஸ்ரேல் - பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும். ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டனர். எனவே ஹமாஸ் எங்களுக்கும் எதிரி என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via