பள்ளிமாணவர்கள்..இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம். பெற்றோர்கள் வேதனை.

நாட்டில் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பிரீ பையர் என்ற ஆன்லைன் விளையாட்டில் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் குழந்தைகள் மூழ்கிக் கிடக்கும் சூழல் காரணமாக கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர்.
இளைய சமுதாயம் முழுவதும் இன்று ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, வாழ்க்கையையே அழித்துக் கொள்கின்றனர். நாளிதழில் தினந்தினம் ஒரு துயரச் செய்தியைக் காண நேரிடுகிறது. ஆன்லைனில் கேம் விளையாடி பணத்தை இழந்து இளைஞர் தற்கொலை; சிறுவன் மனநிலை பாதிப்பு, இதுபோன்ற பல துயரச் சம்பவங்கள் இன்றளவும் நடந்த வண்ணம் உள்ளது.
தங்கள் பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். மொபைலை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடும் இளைஞர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தக்கூடிய தகவலாகும்
கொரோனா ஊரடங்கில் இணைய விளையாட்டுக்கு அடிமையான பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது சமூக நோயாக மாறியுள்ளது. குறிப்பாக, ஃப்ரீ பயர், பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பள்ளிக் குழந்தைகள் அடிமையாவது தொடர்கிறது. ஒரு வீதியில் 10 பேர் ஒன்றுகூடி ஆன்லைன்விளையாட்டுகளில் பல மணிநேரம் ஈடுபட்டு தங்களை அடிமையாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற ஆன் லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்தாலும் வெவ்வேறு வழிகள் மூலமாக அதை டவுன்லோட் செய்து அதிக அளவில் இன்றைக்கு குழந்தைகள் இளைஞர்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அதிக அளவில் இந்த பிரிபயர் விளையாட்டுகளை விளையாடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பெற்றோர்கள் அறிவுரை கூறினாலும் அதையும் தாண்டி குழந்தைகள் அடம்பிடித்து விளையாடக்கூடிய சூழ்நிலை உள்ளது. அதையும் மீறி தடுத்தால் தவறான முடிவுக்கு குழந்தைகள் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்
பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களால் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் அரசு அதை முற்றிலுமாக தடை செய்ததற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் மனநிலையை மாற்றும் வகையில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ஆன் லைன் விளையாட்டு என்ற அபாயகரமான அரக்கனை அகற்றி குழந்தைகளை வாழ்வில் உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது....
Tags : பள்ளிமாணவர்கள்..இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம். பெற்றோர்கள் வேதனை.