காவல்துறை இயக்குநர்‌  சங்கர் ஜிவால் ‌பணிக்காலம் ‌ 31ஆம் தேதியுடன் நிறைவு அடுத்த டிஜிபி யார்?

by Staff / 23-08-2025 09:33:53am
காவல்துறை இயக்குநர்‌  சங்கர் ஜிவால் ‌பணிக்காலம் ‌ 31ஆம் தேதியுடன் நிறைவு அடுத்த டிஜிபி யார்?

தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்கக்கோரி காவல்துறை மூத்த அதிகாரி பிரமோத்குமார் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வரும் செப்டம்பரில் பிரமோத்குமார் ஓய்வு பெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. 

தமிழ்நாடு அரசு காவல்துறையின் தற்போதைய இயக்குநர்‌  சங்கர் ஜிவால் ‌பணிக்காலம் ‌ இந்த ஆகஸ்ட் மாதம் ‌ 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காவல்துறை இயக்குநரைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தும் முன்பாக ‌ மாநில அரசு, மூப்பின் அடிப்படையிலும் ‌ தகுதியின் அடிப்படையிலும் ‌ அடுத்தடுத்து வரிசையில் இருக்கக்கூடிய ‌ ஐபிஎஸ் அதிகாரிகளின் ‌ பட்டியலை ‌ இந்திய அரசின் ‌ ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ‌ மூன்று மாதங்களுக்கு முன்பாக அனுப்ப வேண்டும். 

இதில் குறைந்தபட்சம் ஆறு மாதம் ‌ பணிக்காலம் இருக்கக்கூடியவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் எனும் விதியும் இருக்கிறது.அதில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து‌ தேர்வாணையம் மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்.அந்த மூன்று பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‌ காவல்துறை தலைமை இயக்குநர் ‌ பொறுப்புக்கு மாநில அரசு அமர்த்தும்.இதுதான் விதிமுறை. 

இப்படி இருக்க தற்போதைய காவல்துறை இயக்குநர்  சங்கர் ஜிவால் ‌  பணி காலம் நிறைவுற இன்னும் ஒரு வார காலமே இருக்கக்கூடிய நிலையில் இதுவரை ‌ தமிழ்நாடு அரசு சார்பில் யூபிஎஸ்சி க்கு அதிகாரிகளின் பட்டியல் அனுப்பப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. 

 

 

Tags : காவல்துறை இயக்குநர்‌  சங்கர் ஜிவால் ‌பணிக்காலம் ‌ 31ஆம் தேதியுடன் நிறைவு அடுத்த டிஜிபி யார்?

Share via