தென்காசி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சுற்றுப்பயணம் - நிகழ்ச்சி விபரம்:

by Staff / 28-10-2025 11:42:28am
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சுற்றுப்பயணம் - நிகழ்ச்சி விபரம்:

இன்று 28.10.2025 மாலை 17.30 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 17.50 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று 18.00 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 19.40 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று 20.00 மணிக்கு அங்கிருந்து 21.30 மணிக்கு கோவில்பட்டி சென்று அங்கு கலைஞர் கருணாநிதி  அவர்களின் திரு உருவ சிலையை திறந்து வைக்கிறார். 

 பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார்,

மறுநாள்  29.10.2025 காலை 09.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆலங்குளம் வழியாக தென்காசி செல்கிறார். ஆலங்குளத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

காலை  11.00 மணிக்கு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு பின்பு 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சி முடிந்து பின்னர் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு அமர் சேவா சங்கம் சென்று அங்கு விசிட் முடித்து கொண்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு 13.30 மணிக்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் சென்று தங்குகிறார்,

மீண்டும் மாலை 17.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 20.00 மணிக்கு மதுரை சர்க்யூட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார்,

அதன் மறுநாள் 30.10.2025 காலை அங்கிருந்து புறப்பட்டு 07.45 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு 08.00 மணிக்கு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அங்கிருந்து 08.10 மணிக்கு  புறப்பட்டு 09.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து பின்பு 13.30 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 14.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 15.10 மணிக்கு சார்லி இல்லம் வருகிறார்

 

Tags : தென்காசி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சுற்றுப்பயணம் - நிகழ்ச்சி விபரம்:

Share via