மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து பணம் கொள்ளை

by Editor / 07-08-2022 01:21:09pm
மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து பணம் கொள்ளை

திருப்பூர் அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை துரிதமாக செயல்பட்ட போலீசார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். சோலிபாளையம்  சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்த கோபாலன் முத்துலட்சுமி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். பனியன் நிறுவனத்தை நடத்திவரும் கோபாலன் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி மர்ம நபர்களால் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டு 42 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது .வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை விசாரித்து வந்தனர். தொடர் விசாரணையில் வீட்டிற்கு பிளம்மிங் வேலைக்கு வந்த அருண்குமார் அமரன் தனது கூட்டாளியான தினேஷ்குமார் ஆகிய 3 பேரும் திட்டமிட்டு மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories