ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

by Staff / 25-10-2023 04:39:18pm
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை பாதுகாப்பு போலீசார் மடக்கிப் பிடித்தனர். தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால், ஆளுநர் மாளிகை முகப்பு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்த நிலையில், கிண்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo