புத்தகப் பைகளில் கட்சித் தலைவர்களின் படங்கள்.-உயர்நீதிமன்றத்தில் வழக்கு

by Editor / 07-09-2021 02:34:43pm
புத்தகப் பைகளில் கட்சித் தலைவர்களின் படங்கள்.-உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 

புத்தகப் பைகளில் கட்சித்தலைவர்களின் படத்தை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை தெரிவித்துள்ளது..

முந்தைய ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கும் புத்தகப் பை உள்ளிட்ட பொருட்களில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டது.. ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் அவற்றை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக விநியோகிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது..

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.. அப்போது " ஏற்கனவே அச்சிடப்பட்ட புத்தக பைகள், பொருட்கள் கிடப்பில் போடப்படாது.. அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. மேலும் இதுபோன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் தலைவர்களின் படங்களை அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை.. எனவே பள்ளி, புத்தக பைகளில் படத்தை அச்சிட வேண்டாம் என்று முதல்வர் உதரவிட்டுள்ளார்.." என்று தெரிவித்தார்..

இதைக் கேட்ட நீதிபதிகள் " மாணவர்களின் புத்தகபை உள்ளிட்ட பொருட்களில் கட்சித்தலைவர்களின் படத்தை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது.. புத்தகப் பைகளில் தலைவர்களின் படங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.. இதற்கான முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.." என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்..

 

Tags :

Share via