ராசி பலன்கள் 08.03.2022

by Editor / 07-03-2022 11:43:04pm
ராசி பலன்கள் 08.03.2022

மேஷம்
மார்ச் 08, 2022

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


அஸ்வினி :  நெருக்கடிகள் குறையும்.

பரணி : லாபம் மேம்படும். 

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். 
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 08, 2022

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைகள் அகலும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

 
கிருத்திகை : உதவி கிடைக்கும்.

ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 08, 2022

எண்ணிய சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மிருகசீரிஷம் : மனக்கசப்புகள் குறையும். 

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும். 
---------------------------------------


கடகம்
மார்ச் 08, 2022

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் மனம் மகிழும் செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 

பூசம் : இழுபறிகள் குறையும்.

ஆயில்யம் : சேமிப்பு மேம்படும். 
---------------------------------------

சிம்மம்
மார்ச் 08, 2022

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும்.  அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். 
---------------------------------------


கன்னி
மார்ச் 08, 2022

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தொழில் ரீதியான பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.  மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும். 

அஸ்தம் : நன்மையான நாள். 

சித்திரை : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------


துலாம்
மார்ச் 08, 2022

சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும்.  எந்தவொரு செயலையும் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் வழியில் சிறு சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும். தைரியம் வெளிப்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

 
சித்திரை : மாற்றம் உண்டாகும். 

சுவாதி : பொறுமை வேண்டும். 

விசாகம் : விவாதங்கள் ஏற்படும். 
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 08, 2022

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும்.  தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 
விசாகம் : விருப்பம் நிறைவேறும். 

அனுஷம் : முன்னேற்றமான நாள். 

கேட்டை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------


தனுசு
மார்ச் 08, 2022

சகோதரர் வழியில் ஆதரவு மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : திறமைகள் வெளிப்படும். 

பூராடம் : சாதகமான நாள். 

உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------


மகரம்
மார்ச் 08, 2022

வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.  இன்னல்கள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 
உத்திராடம் : லாபம் அதிகரிக்கும். 

திருவோணம் : அனுகூலமான நாள். 

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 08, 2022

சுபகாரியம் தொடர்பான எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

சதயம் : அறிமுகம் கிடைக்கும். 

பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள். 
---------------------------------------


மீனம்
மார்ச் 08, 2022

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

ரேவதி : புரிதல் மேம்படும். 
-------------------------------

 

Tags :

Share via