130 புள்ளிகள் வரையில் உயர்ந்த  சென்செக்ஸ் சரிவு பாதைக்கு சென்றது.

by Editor / 24-07-2021 06:05:56pm
130 புள்ளிகள் வரையில் உயர்ந்த  சென்செக்ஸ் சரிவு பாதைக்கு சென்றது.

 

சென்செக்ஸ் போலவே உயர்வுடன் துவங்கிய நிஃப்டி 16.85 புள்ளிகள் சரிவில் 15,773.60 புள்ளிகளை அடைந்துள்ளது.சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் AGM சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ரிலையன்ஸ்-ஐ தொடர்ந்து ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்லே, கோட்டாக் வங்கி, என்டிபிசி, பவர் கிரிட் ஆகியவை சரிவு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய மாற்றமில்லாமல் 74.14 ரூபாய் அளவில் உள்ளது.சிறப்பான காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக ஓஎன்ஜிசி பங்குகள் 2 சதவீதம் உயர்வு.


2,334.69 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்த எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள்  2.45 சதவீதம் உயர்வு.
தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை 41 ரூபாய் உயர்ந்து 46,911 ரூபாய்க்கு 10 கிராம் தங்கம் விற்பனை

 

Tags :

Share via