ஏழை பாட்டியின் சிரிப்பை   புகைப்படம் எடுத்தவரை   நேரில் வரவழைத்து முதல்வர் பாராட்டு 

by Editor / 25-06-2021 06:04:55pm
ஏழை பாட்டியின் சிரிப்பை   புகைப்படம் எடுத்தவரை   நேரில் வரவழைத்து முதல்வர் பாராட்டு 

 

ஏழை பாட்டியின் அழகிய சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் புகைப்பட கலைஞரை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டி உள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 4000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி முதல் கட்டமாக ரூபாய் 2000 மற்றும் இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 வழங்கிய தினத்தில் புகைப்படக்கலைஞர் ஒருவர் ஏழை பாட்டி ஒருவரை எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஒரு கையில் 2,000 ரூபாயும் இன்னொரு கையில் மளிகை பொருட்களையும் கையில் வைத்திருந்த அவரது சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில் ஏழை பாட்டியின் அழகிய சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹேர்பி என்பவரை நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவருக்கு அந்தப் புகைப்படத்தையே பரிசாக கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படம் த தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via