விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி

விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என அன்புமணி ராமதாஸ் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். பனையூரில் நடைபெற்ற பாமக ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, "வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது ஏன் அன்பு ஏற்பட்டுள்ளது? எப்போதாவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருப்பாரா? இப்போது புகழ்வது ஏன்?; செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்?" என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
Tags :