கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பால்பண்ணை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த பீட்சா மாஸ்டரான கிருஷ்ணன் என்ற கிச்சா (வயது 26) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்ததுடன் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
Tags :