அதிநவீன ரேடார் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் விண்ணுக்குநாளை ஏவப்படவுள்ளது

by Admin / 13-02-2022 11:27:27am
அதிநவீன ரேடார் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் விண்ணுக்குநாளை ஏவப்படவுள்ளது

2022 -ஆம் ஆண்டில் முதல் செயற்கைக்கோளை நாளை காலை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 

இது பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனா். இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. 

இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது புவியில் இருந்து 529 கி.மீ.

 உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன. 

இந்த ரேடார் செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்குப் பயன்படும். அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. 

மேலும், விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவிபுரியும். இந்த பிஎஸ்எல்வி-சி-52 ராக்கெட், இந்த ஆண்டில் முதன் முதலாக ஏவப்படுவதாகும்.

தொடா்ந்து 10-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவுவதற்காக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

 

 
 

 

Tags :

Share via