வெளிநாட்டிலிருந்து ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக வரும் மாணவர்களை கட்டுப்படுத்தும் அமெரிக்கஅதிபர் டெனால்ட் ட்ரம்ப்.

by Admin / 29-05-2025 08:34:02am
 வெளிநாட்டிலிருந்து ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக வரும் மாணவர்களை கட்டுப்படுத்தும் அமெரிக்கஅதிபர் டெனால்ட் ட்ரம்ப்.

உலகில் குறிப்பிடத்தக்க ஒரு பல்கலைக்கழகமாக திகழும் ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த நிதியை சமீபத்தில் நிறுத்தி வைத்தது.. அதனை தொடர்ந்து தற்பொழுது வெளிநாட்டிலிருந்து ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக வரும் மாணவர்களை கட்டுப்படுத்தி உள்ளூர் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கருத்தில் அவர் சர்வதேச மாணவர் எண்ணிக்கையை 31 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று நேற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை வழங்கிய 2.2 பில்லியன் டாலர் நிதி முடக்கப்பட்டது. அதற்கான காரணமாக அவர் யூத எதிர்ப்பு கொள்கையை ஃபார்வேர்டு பல்கலைக்கழகம் கையில் எடுத்துள்ளதாகவும் சர்வதேச மாணவர்கள் அதாவது கடந்த ஆண்டில் மட்டும் 27. 2 விழுக்காடு மாணவர்கள் படிப்பதன் மூலமாக அவர்களுக்காக 5 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வர்த்தக கல்வி நிறுவனங்களை தொடங்க பலர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ட்ரம்மால் நிறுத்தப்பட்ட  பல்கலைக்கழக நிதிக்கு எதிராக பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via