இன்ஸ்பெக்டர் தாக்கிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுந்தரி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு இடப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அப்போதைய மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் (தற்போது இவர் ஓய்வுபெற்று விட்டார்) தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் எங்களை கைது செய்து தாக்கினார். எனவே, இன்ஸ்பெக்டர் குமாரவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த ஆணையம், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாரபட்சமாக நடந்து கொண்டு மனுதாரரை துன்புறுத்தியது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்
Tags :