திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி வழிபட நள்ளிரவில் குவிந்த  பக்தர்கள்.

by Editor / 23-05-2024 12:20:58am
திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி வழிபட நள்ளிரவில் குவிந்த  பக்தர்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று இந்த கடற்கரையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து மறுநாள் காலையில் தூங்கி எழுந்து நாழி  கிணற்றிலும் கடலிலும் புனித நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினால் 

வாழ்க்கையில் உடல் அளவிலும் மன அளவிலும்  பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்று  கருதப்படுகிறது.அதன்படி நேற்று நள்ளிரவு  வைகாசி மாதத்தில் வரக்கூடிய  பௌர்ணமி தினத்தை யொட்டி தமிழ்நாட்டில் சேலம் கரூர் நாமக்கல் திருச்சி,ஈரோடு  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை முதலே  கோவில் கடற்கரையில் குவிய துவங்கினர்.ஒன்றாக அமர்ந்து  உணவருந்திய பக்தர்கள் கடற்கரையிலேயே  விளக்கேற்றி வழிபட்டதுடன்  தியானமும் செய்தனர். மேலும் கடற்கரையில் தங்க வருகை தந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் பக்த்த சபை அமைப்பு மூலமாக 
வடை பாயாசத்துடன் உணவுகள் வழங்கப்பட்டது.
பக்தர்கள் வரத்து அதிகமான காரணத்தினால்  கோவில் கடற்கரை மட்டுமல்லாது  வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 

Tags : திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி வழிபட நள்ளிரவில் குவிந்த  பக்தர்கள்..

Share via