ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் வரவேற்கத்தக்கது- பா.சிதம்பரம்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்தது போல் இருந்துவிட்டது.ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு வரவேற்கத்தக்கது,
ஆனால் இது 8 ஆண்டுகாலம் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது?மெதுவான வளர்ச்சியா?பெருகிவரும் குடும்பக் கடனா? குறைந்து வரும் குடும்ப சேமிப்பா.?என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர்-பா.சிதம்பரம் கேள்வி எழுப்புயுள்ளார்.
Tags : ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் வரவேற்கத்தக்கது- பா.சிதம்பரம்.