குடியரசு தலைவர் தேதியை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

by Staff / 09-06-2022 04:22:55pm
குடியரசு தலைவர் தேதியை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்


குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு .

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 25இல் தொடங்கும் 


வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29 ஆகும் 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 30இல் நடைபெறுமென மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 2 

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது ஜூலை 21 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்தியக் குடிமகனாகவும் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பது விதி மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மதிப்பு வேறுபடும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு நிர்ணயம் தலைமை தேர்தல் ஆணையர் என 700 776நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4120 சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் ஒரு தமிழக எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் அனைத்து சட்ட மன்றங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும்.

 

Tags :

Share via