விஜய்யின் கட்சி பெயருக்கு வந்த புதிய சிக்கல்

by Staff / 07-02-2024 02:23:53pm
விஜய்யின் கட்சி பெயருக்கு வந்த புதிய சிக்கல்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு தனது வாழ்த்துக்களை கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் TVK தான். நடிகர் விஜயின் கட்சிக்கும் அதுவே தான் ஆங்கில சுருக்கமாக இருக்கும். தேர்தல் ஆணையத்தில் அவர்கள் பதிவு செய்துவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இரண்டு கட்சிக்கு ஒரே பெயர் என்பது சாத்தியமில்லை, எனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து மனு அளிப்போம் என கூறிள்ளார்.

 

Tags :

Share via

More stories