காவல்துறையின் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் 

by Admin / 08-09-2025 02:34:14am
காவல்துறையின் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் 

காவல்துறையின் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் 

- பெண் காவலரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு - போக்குவரத்து உதவி ஆய்வாளர் பெண் காவலரை மிரட்டும் ஆடியோ வெளியாகி கோவில்பட்டியில் பரபரப்பு துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில்  உதவி ஆய்வாளராக வேலைபார்த்து வந்தவர் செல்வகுமார், (36) அதே பிரிவில் இந்திராகாந்தி, (32)என்பவர் காவலராக வேலைபார்த்து வந்தார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கடந்த மாதம் 17 ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இப்பிரச்னை வெளியே தெரிந்ததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்துாருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யபப்பட்டனர்.இதற்கிடையே, இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார்  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உள்ளார். இப்பிரச்னை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது  நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதையெடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசி மணி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Tags :

Share via

More stories