இலங்கையில் போதிய மருந்துகள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் போதிய மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை வழங்கும் படி இந்திய தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள பெத்தானியா மருத்துவமனையில் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அவசர பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் இலங்கையைச் சேர்ந்த செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது என்று மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க இந்திய தூதரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Tags :