கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைப்பு.

by Editor / 24-04-2022 09:23:51am
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைப்பு.

கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க கோயம்புத்தூர் ராமேஸ்வரம் குருவாயூர் திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கோயம்புத்தூர் -  நாகர்கோவில் விரைவு ரயில் (22668) மற்றும் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) ஆகியவற்றில் ஏப்ரல் 21 முதல் மே 31 வரையும், நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயிலில் (22667) ஏப்ரல் 22 முதல் ஜூன் 1 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும்.

 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16851) மற்றும் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஆகியவற்றில் ஏப்ரல் 21 முதல் ஜூன் 1 வரையும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (16852) ஏப்ரல் 21 முதல் ஜூன் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயிலில் (22567) ஏப்ரல் 24 முதல் மே 30 வரையும் நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை விரைவு ரயிலில் (22568) ஏப்ரல் 25 முதல் மே 31 வரையும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை வாரம் மும்முறை சேவை விரைவு ரயிலில் (20601) ஏப்ரல் 22 முதல் மே 20 வரையும்,

 மதுரை - புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை சேவை விரைவு ரயிலில் (20602) ஏப்ரல் 24 முதல் மே 31 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. மதுரை - சண்டிகர் வாரம் இருமுறை சேவை விரைவு ரயிலில் (12687) ஏப்ரல் 24 முதல் மே 29 வரையும்,

 சண்டிகர் - மதுரை வாரம் இருமுறை சேவை விரைவு ரயிலில் (12688) ஏப்ரல் 25 முதல் மே 30 வரையும், கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயிலில் (16618) ஏப்ரல் 26 முதல் மே 31 வரையும், ராமேஸ்வரம் கோயம்புத்தூர் வாராந்திர விரைவு ரயிலில் (16617) ஏப்ரல் 27 முதல் ஜூன் 1 வரையும் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலில் (16127) ஏப்ரல் 21 முதல் மே 31 வரையும், குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (16128) ஏப்ரல் 22 முதல் ஜூன் 1 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைப்பு.
 

Tags : Attach extra boxes to deal with summer vacation crowds.

Share via