பள்ளிகள், தர்காக்களுக்கான மானியம் உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி வாசல்கள், தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாள் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், அடக்கஸ்தலம் இல்லாத சிறுபான்மையினருக்கு மாவட்ட தலைநகரங்களில் இடம் ஒதுக்க அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags :