விரைவு ரயில் பெட்டியில் புகை வெளியேறியதால் பரபரப்பு

திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும் போது பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்த, பெட்டியில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கினர்.உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன.
Tags :