அபசகுனம் பிடித்தவரால்தான் இந்திய அணி தோற்றது - ராகுல் காந்தி

அபசகுனம் பிடித்த ஒருவர் போட்டியை பார்க்க நேரில் சென்றதால்தான் இந்திய அணி தோற்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், 'உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது. அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து, இஸ்லாமியர் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்' என மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
Tags :