மக்களோடு மக்களோடு தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு வந்திருக்ககூடும்-டிரம்ப் எச்சரிக்கை

by Admin / 25-08-2021 12:17:17pm
மக்களோடு மக்களோடு தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு வந்திருக்ககூடும்-டிரம்ப் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு வெளியேற்றப்பட்டிருக்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்கன் விவகாரத்தில் அதிபர் ஜோபைடனின் முடிவை கடுமையாக சாடிய ட்ரம்ப், ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகளில் கைகளில் ஒப்படைத்த ஜோபைடன், அங்குள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கு முன்பாக அமெரிக்க படைகளை வெளியேற்றி, அமெரிக்க குடிமக்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளார் என சாடினார்

. மேலும் ஆப்கானிதானில் இருந்து வெளியேற்றப்பட்ட 26 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே அமெரிக்கர்கள் என கூறிய அவர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு வெளியேற்றப்பட்டிருக்க கூடும் எனவும் அச்சம் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo