மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை..5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்துள்ள போதிலும், 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாளை மறுநாள் (ஜன.30) முதல் பிப்.2 வரை தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.30,31 தேதிகளில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை..