சாத்தான்குளம் வழக்கில் இரண்டாவதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவத்தில் சிபிஐ தரப்பில் கூடுதலாக 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை மதுரை கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கெனவே 2,027 பக்கங்கள் அடங்கிய முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது இரண்டாவதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Tags :


















.jpg)
