சமூக விரோதிகளின் அட்டகாசம் தலை விரித்தாடுகிறது- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க.-வின் விடியா ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.
2011 -ல் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழகத்தில் வடமாநிலக் கொள்ளையர்கள் மற்றும் தமிழ் நாட்டு கிரிமினல்களின் அட்டகாசம் அதிக அளவில் இருந்தது. அம்மா காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதன் காரணமாக குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.
அம்மாவைத் தொடர்ந்து, அம்மாவின் அரசும் இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
Tags :