கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக  செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்குவிருது அறிவிப்பு

by Editor / 02-10-2021 03:33:57pm
கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக  செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்குவிருது அறிவிப்பு



கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மத்திய புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் (வடக்கு மண்டலம்) ப.தட்சணாமூர்த்தி, மத்திய புலனாய்வு பிரிவு (வேலூர் மண்டலம்) இன்ஸ்பெக்டர் மா.குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பா.சக்தி, திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையம் சப்- இன்ஸ்பெக்டர் ச.சிதம்பரம், காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விருது, மு.க.ஸ்டாலினால் ஜனவரி மாதம் 26-ந்தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo