தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ஆலோசனை
இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு மாலை 3 மணிக்கு தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ஆலோசனை மேற்கொள்ளார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி அதிருப்தி தலைமை மீதான அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உள்ள சூழலில் அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தின் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி உள்ள விலகல் கடிதத்தில் இயக்கமும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைமை நினைப்பதாகவும் திமுக எதிர்ப்பு என்ற கொள்கை நிலையிலிருந்து மாறி திமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்டதாகவும் இதனால் கட்சி தன் சுய அடையாளத்தை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு கடந்த தேர்தல் காலத்தில் தான் தனித்து விடப்பட்டதாகவும் மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதை உணர்ந்து கொண்டதாகவும் சரியான நேரத்தில் அதிமுக தலைமை தவறான முடிவுகளை எடுத்ததால் கட்சியை தன் வெற்றியை பாதையில் இருந்து விலகிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Tags :



















