செந்தில் பாலாஜி அவரது சகோதர அசோக்குமார் மீது வழக்கு பதிவு -திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கோரி சம்மன்
தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க்கும் நோக்கில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தன்னிடம் 35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அவரது சகோதர அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக்குமாரை தேடி கடந்த நான்கு நாட்களாக தனி படை காவல்துறையினர் கரூரில் முகாமிட்டிருந்தனர் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் கரூர் மாவட்டம் ராமேஸ்வர பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டிற்கு காவல்துறையினர் நேரில் சென்று அவர்கள் இருவரும் திங்கள்கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கோரி சென்னை காவல்துறையினர் சம்மன்வழங்கி உள்ளனர்.. ஏற்கனவே, அசோக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில், இருவரும் வெளிநாடு தப்பி சென்று விடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
Tags :



















