கொரோனா தொற்றால் இந்திய நிறுவனங்களின் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றால் இதுவரை பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பலகோடி உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தை குறைக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் உணவுபொருட்கள் அடைக்கப்பட்ட அட்டை பெட்டியில் கொரோனா தொற்றின் தடயங்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து உணவு பொருட்கள் பெறுவதை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துளது. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :