பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்-ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி ஆலோச

ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி ஆலோசனை நடத்தினார்.
கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னியும், இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இல்லத்தில் முதல்வர் சரண்கீத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்பு விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவைக் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :