ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

by Editor / 18-06-2021 07:29:48am
ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சி கண்டதால், அவரது சொத்து மதிப்பு குறைந்து, ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். தற்போது பட்டியலில் அம்பானியை விட பின் தங்கியுள்ளார்.அதானியின் 2-ம் இடத்தை 'நொங்பூ ஸ்பிரிங்' எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதாக வெளியான செய்தியே அதானியின் சொத்து மதிப்பு சரிய காரணம் ஆகும்.இவ்வார தொடக்கத்தில் 7,700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் நிகர சொத்து மதிப்பு, கடந்த சில நாட்களில் 6,300 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். பங்குசந்தைகளின் இன்றைய வர்த்தகத்தின் போது அதானி நிறுவனங்கள் மேலும் ஆட்டம் காணக்கூடும் என்கின்றனர்.பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு முன்னர் அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தில் இருந்தன. ஏப்ரல் 2021-ல் அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட ஆசியாவின் 3-வது குழும நிறுவனமாக மாறியது. தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!
 

Tags :

Share via