ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சி
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவர் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றோடொன்று ஆக்ரோசமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி தீபக் சிங் யானைகளின் இந்த சண்டை கண்காணிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு யானையின் தந்தம் இந்த சண்டையில் உடைந்து போனது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த மோதல் வழக்கமானது என்று கூறிய அவர் தங்களுக்குள் யார் பெரியவர் என்பதற்காகத்தான் இந்த சண்டை நடந்துள்ளது என்றார்.
Tags :