கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

by Staff / 01-04-2023 02:01:48pm
கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கராச்சியில் உணவு விநியோக மையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உணவு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, ​​கடும் கூட்டல் நெரிசல் இருந்த காரணத்தால் மின்சார வயரை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் 2 பேரை மின்சாரம் தாக்கியது. அப்போது அவர்களைக் கண்டு பீதியடைந்த மக்கள் ஓட ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via
Logo